FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

விழுப்புரத்தில் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

விழுப்புரத்தில் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
 விழுப்புரம் பூந்தோட்டம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளர் வி.சோழன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆர்.கந்தசாமி வரவேற்றார். கல்வியாளர் பி.அன்புபெரியசாமி முன்னிலை வகித்தார். தனி வட்டாட்சியர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஆசிரியர்களுக்கு முன்னோடியாக விளங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர்கள் தினமாக கொண்டாடுவதன் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.
 பள்ளி ஆசிரியர்களுக்கு பூக்களை வழங்கி மாணவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக பரிசு அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் கே.பிரிதிவிராஜ் நன்றி கூறினார்.
 நன்னாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள், வ.உ. சி. பிறந்த நாள், அன்னை தெரசா நினைவு தினம் ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் இரா. கலைச்செல்வி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் கோ. கஜேந்திரன், க.சுப்புலட்சுமி, பா. பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 ஆசிரியர்கள் க. ராம்குமார், தி. பரிமேலழகன், நன்னாடு அப்துல் கலாம் நற்பணி மன்ற உறுப்பினர் தீனதயாளன் மற்றும் காவலர் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். காணை வி. இ. டி. கல்வியியல் கல்லூரி ஆசிரியர் மு. கார்த்திகா, கப்பியாம்புலியூர் சிகா கல்வியியல் கல்லூரி ஆசிரியர் த. அய்யனார் வாழ்த்துரை வழங்கினர்.
 நன்னாடு அப்துல் கலாம் நற்பணி மன்ற உறுப்பினர்கள் சிரஞ்சீவி, பாலா, பொறியாளர் தேவநாதன், ஆய்வக உதவியாளர் மு. பாலாஜி, வி. இ. டி, சிகா கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 முன்னதாக, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments