FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோயில் அருகே தகராறு: 3 பேர் கைது

கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரத்தில் கோயில் அருகே தகராறு செய்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரத்தில் கோயில் அருகே தகராறு செய்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 கண்டமங்கலம் அருகே சின்னபாபு சமுத்திரம் பகுதியில் உள்ள படேசாயுபு கோயில் அருகே சிலர் நின்று கொண்டு தகராறில் ஈடுபடுவதாக கண்டமங்கலம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
 இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, கையில் கட்டையுடன் நின்று கொண்டிருந்த புதுச்சேரி அருமாத்துபுரத்தைச் சேர்ந்த சேகர் மகன் சங்கர்(31), பாஸ்கர் மகன் முத்து(27), கண்டமங்கலத்தைச் சேர்ந்த சின்னதம்பி மகன் பாலமுருகன்(23) ஆகிய 3 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
 விசாரணையில், அவர்கள் மணல் திருட்டில் ஈடுபடுவது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தகராறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments