சத்துணவுப் பொறுப்பாளர் பணிக்கு நேர்காணல்
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் வட்டங்களைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கரியாலூர் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில்
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் வட்டங்களைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கரியாலூர் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சத்துணவுப் பொறுப்பாளர் பணிக்கான நேர்காணல் புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சிக்கு உதவி செயற்பொறியாளர் நித்யா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்
ப.இராஜவேல் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட 19 மையங்களிலிருந்து 227 பேர் பங்கேற்றனர். வட்டாரக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகாலட்சுமி, ஷபி, ஜோசப் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் சான்றிதழ்களை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதே போல சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சி.சிவகாமி, ரு.கருணாநிதி முன்னிலை வகித்தனர். 13 மையங்களிலிருந்து 161 பேர் பங்கேற்றனர்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் அ.ராஜராஜன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தோணிஅம்மாள், மணிமேகலை, வி.அய்யப்பன், பி.ரங்கசாமி, வி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குழந்தைசாமி தலைமையில் சத்துணவுப் பொறுப்பாளர் பணிக்கானநேர்காணல் நடைபெற்றது. 20 மையங்களிலிருந்து 268 பேர் பங்கேற்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்சாமி, கமலக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.
வட்டாரக் கல்வி அலுவலர் முத்துசாமி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொளஞ்சிவேல், முருகன் உள்ளிட்டோர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் ம.தினேஷ் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி முன்னிலை வகித்தார். 8 மையங்களைச் சேர்ந்த 17 பேர்கள் பங்கேற்றனர். கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுராஜா உள்ளிட்டோர் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.