விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் அளிப்பு
திருக்கோவிலூர் அருகே ஏமப்பேர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
திருக்கோவிலூர் அருகே ஏமப்பேர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
9 விவசாயிகளுக்கு உளுந்து மினி கிட்டுகள், தெளிப்பு நீர் பாசனக் கருவிகள், மழைத்தூவான்கள் போன்ற இடுபொருள்களை திருக்கோவிலூர் சார்-ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார். வேளாண்மைத் துறை மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.கனகலிங்கம் பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண் அலுவலர்கள் ஆனந்தஜோதி, உதவி வேளாண்மை அலுவலர்கள் ம.வெங்கடகிருஷ்ணன், ஞானவேல், வெங்கடேசப்பெருமாள், திருமலை ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.