முகப்பு
விழுப்புரம்

இறந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.15.45 லட்சம் நிதி வழங்கிய சக காவலர்கள்

இறந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் ரூ.15.45 லட்சம் நிதி திரட்டி அளித்திருக்கின்றனர்.

Updated On : 16 ஜூன் 2020, 3:15 pm IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மறைந்த காவலர் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு, அவருடன் தேர்வாகி தமிழ்நாட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற காவலர்கள் நிதி திரட்டி ரூ.15,45,900/- ரூபாய்கான காசோலையை, இறந்த காவலர் செந்தில்குமாரின் குடும்பத்தினரிடம் திங்கள்கிழமை நேரில் வந்து வழங்கினர்.

தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் காவலர் தேர்வில் தேர்வாகிய இரு வேல்பெட்ட சேர்ந்த செந்தில்குமார்( 36), பயிற்சி பெற்று, டெல்லி சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து பின்பு  சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 28.02. 2020 ஆம் தேதி இறந்துவிட்டார்.

இதனால் அவரது குடும்பத்திற்கு உதவிடும் வகையில், அவரது மனைவி சுகந்தி(33), மகன் விக்னேஷ்குமார் (6) அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, மேலும் இவர்களது குடும்பத்துக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 2009 ஆம் ஆண்டு காவலர்கள் குழு உடன் உள்ளனர் என்று கூறிவிட்டு, அவர்களிடம் காசோலையை, திங்கள் கிழமை அவரது வீட்டில், அக்குழுவை சேர்ந்த பிரதிநிதிகள் வழங்கி சென்றனர். 

Advertisement

Advertisement

இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.