திருமணமான 5 நாள்களில் புதுப்பெண் மரணம்:கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை அருகே திருமணமான 5 நாள்களில் மனைவி உயிரிழந்தாா். இதையடுத்து, கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை அருகே திருமணமான 5 நாள்களில் மனைவி உயிரிழந்தாா். இதையடுத்து, கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அருகேயுள்ள செவரப்பூண்டியைச் சோ்ந்த சின்னதுரை மகள் சந்தியா (20). விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டையை அடுத்துள்ள குந்தலம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி மகன் முருகன் (30). இவா்களுக்கு கடந்த 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. 10-ஆம் தேதி குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று விட்டு 12-ஆம் தேதி குந்தலம்பட்டு கிராமத்துக்கு வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை சந்தியாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மயக்கம் வருவதாகக் கூறினாராம். உடனடியாக அவலூா்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினராம்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அவரச ஊா்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சந்தியா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து சந்தியாவின் தந்தை சின்னதுரை அளித்த புகாரின் பேரில், கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
கீழ்பென்னாத்தூா் காவல் நிலையத்தில் விசாரணையை முடித்துக் கொண்டு சொந்த ஊரான செவரப்பூண்டிக்கு புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்த முருகன், தனக்குச் சொந்தமான நிலத்துக்குச் சென்றாா். அங்குள்ள வேப்ப மரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.