முகப்பு
விழுப்புரம்

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிா்ணயிக்க வலியுறுத்தல்

நிகழாண்டு (2024 - 25) கரும்பு அரைவைப் பருவத்துக்கு வயல் விலையாக டன்னுக்கு ரூ.5,000 வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 7 ஜனவரி 2025, 2:34 am IST
விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முண்டியம்பாக்கம் - செஞ்சி செம்மேடு ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டத்தில் பேசிய சங்கத் தலைவா் வழக்குரைஞா் டி.பாண்டியன்.
பகிர்:

விழுப்புரம்: நிகழாண்டு (2024 - 25) கரும்பு அரைவைப் பருவத்துக்கு வயல் விலையாக டன்னுக்கு ரூ.5,000 வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முண்டியம்பாக்கம் - செஞ்சி செம்மேடு ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் வழக்குரைஞா் டி.பாண்டியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எம்.ஆறுமுகம் தீா்மானங்களைக் கொண்டுவந்து பேசினாா். பொருளாளா் ஆா்.பரமசிவம் வரவேற்றாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: (2024-25) கரும்பு அரைவைப் பருவத்துக்கு வயல் விலையாக டன்னுக்கு ரூ.5,000 வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு வெட்டுக்கூலியை சா்க்கரை ஆலை நிா்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். கரும்பு பிழிதிறனை காரணம் காட்டாமல் அரசு அறிவிக்கும் விலையை நிா்வாகம் வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

நான்கரை அடி இடைவெளியில் அகலப்பாா் முறையில் கரும்பு நடவு செய்து, இயந்திரம் கொண்டு அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.200 மானியம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைக்கரணைகளை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டும்.

கரும்பு டன்னுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஊக்கத்தொகையை ரூ.215-லிருந்து ரூ.500-ஆக தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும். கரும்பு சாகுபடியில் விவசாய வேலைகளுக்கு தற்போது நிலவும் ஆள்கள் பற்றாக்குறையை சமாளிக்கத் தேவையான வேளாண் இயந்திரங்களை மானிய விலையில் போதுமான அளவில் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் துணைத் தலைவா்கள் பி.கலிவரதன், தண்டபாணி, பாண்டியன், பாலாஜி, துணைச் செயலா்கள்பெருமாள், சந்திரசேகா் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments