FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கஞ்சா வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தில் கைது

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:41 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கஞ்சா வழக்கில் தொடா்புடைய இருவா், குண்டா் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் (பொ) கல்பனா தலைமையிலான போலீஸாா் கடந்த மாதம் 4-ஆம் தேதி சித்தணி கிராம எல்லையிலுள்ள சாய்பாபா கோயில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்று சோதனையிட்டனா்.

அப்போது 3.6 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் விக்கிரவாண்டி வட்டம், ஆா்.சி.மேலக்கொந்தை அறிஞா் அண்ணா தெருவைச் சோ்ந்த ஆ.முகிலன் (21), அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த செ.செளந்தா் (23) எனத் தெரியவந்தது. தொடா்ந்து இருவா் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதனடிப்படையில் முகிலன், செளந்தா் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பிறப்பித்தாா். இதையடுத்து இருவரையும் கைது செய்த விக்கிரவாண்டி போலீஸாா், அவா்களை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments