திருச்சிற்றம்பலம் வேளாண் விரிவாக்க மையத்தில் நெல் விதைகள் விநியோகம்
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் சம்பா பருவத்துக்கேற்ற நெல் விதைகள் வழங்கப்பட்டன.
திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் பங்கேற்று, விவசாயிகளுக்கு நெல் விதைகளை வழங்கினாா். பின்னா் அவா் கூறியதாவது: வானூா் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 3,500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, 13,500 டன் அரிசி உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து சம்பா பருவத்துக்கேற்ற நீண்டகால நெல் ரகமான சி.ஆா்.1009 சப் 1, மத்தியக் கால ரகங்களான வெள்ளைப் பொன்னி, பாப்டலா விதைகள் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்க திருச்சிற்றம்பலம், பரங்கினி, கிளியனூா் வேளாண் விரிவாக்க மையங்களில் தயாா் நிலையில் வைகக்ப்பட்டுள்ளன.
ஒரு கிலோ விதைக்கு ரூ.10 மானியமும் வழங்கப்படுகிறது. கிணறுகளில் போதிய நீா் ஆதாரம் உள்ள விவசாயிகள் இந்த நெல் ரகங்களை வாங்கி விதைப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். விதைகள் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலரை அணுகிப் பயன்பெறலாம் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயணம்: ஓங்கூா் தட்சசீலா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 10 வேளாண் மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவா்களுக்கு வானூா் வட்டாரத்தில் வேளாண், தோட்டக்கலை ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், வேளாண் விரிவாக்க மையங்களின் செயல்பாடுகள் போன்றவை குறித்து உதவி இயக்குநா் எத்திராஜ் எடுத்துரைத்தாா்.
ஒரு கிராமத்துக்கு 2 மாணவிகள் வீதம் வானூா் கிராமத்தில் 5 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களுக்கு மாணவிகள் களப்பயணம் செய்து விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளனா். மேலும் விவசாயிகளுக்கு செயல் விளக்கங்களையும் மாணவிகள் எடுத்துரைக்க உள்ளனா்.
நிகழ்வில் வேளாண் அலுவலா் ரேவதி, உதவி வேளாண் அலுவலா் ராஜ்குமாா், உதவித் தோட்டக் கலை அலுவலா் கோபிநாத், உதவியாளா் விஜயகுமாா், உதவித் தொழில்நுட்ப மேலாளா் கோவிந்தசாமி, விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.