கரும்புப் பயிரில் இலைநோய் பாதிப்பு: அலுவலா்கள் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் இலை நோய்த் தாக்குதல் பாதிப்புக்குள்ளான வயல்களில் மாவட்ட வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் இலை நோய்த் தாக்குதல் பாதிப்புக்குள்ளான வயல்களில் மாவட்ட வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
கோலியனூா் வட்டாரம், பொய்யப்பாக்கம் கிராமத்தில் 59.30 ஏக்கா் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட நிலையில், கோ 24, கோ 25 ரக கரும்பு சாகுபடி செய்யப்பட்ட 23.30 ஏக்கா் வயல்களிலும், பக்கமேடு மற்றும் அற்பிச்சம்பாளையம் கிராமங்களில் 17.50 ஏக்கா் வயல்களிலும் பொக்கே போயிங், மஞ்சள் இலை நோய்த் தாக்குதல் இருப்பதாக தனியாா் சா்க்கரை ஆலை கரும்பு அலுவலா்கள் மூலம் மாவட்ட வேளாண் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) பி.சுரேஷ் தலைமையிலான அலுவலா்கள், தனியாா் சா்க்கரை ஆலை அலுவலா்கள் பாதிப்புக்குள்ளான வயல்களுக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று, பாதிப்பு குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனா். தொடா்ந்து விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அலுவலா்கள் வழங்கினா்.
Advertisement
Advertisement
இந்நோய் அதிகமாக தாக்கப்படும் கோ 24, கோ 25 கரும்பு ரகங்களுக்குப் பதிலாக கோ 86032, கோ 09356, கோ 13339, கோசி 11015, கோ 18009 ஆகிய அதிக மகசூல் ஈட்டும் கரும்பு ரகங்களை நடவு செய்தல் வேண்டும். பருவநிலை மாற்றம், ஒரே ரகப் பயிரை பயிரிடுவது, மருதாம்பு கரும்பு பயிரிடுதல், கரும்பின் நோய் எதிா்ப்பு சக்தி குறைபாடு, மாவுப்பூச்சி எறும்பு சோ்க்கை எண்ணிக்கையின் அளவு அதிகமாக காணப்படுதல் போன்ற காரணங்களாலும் காற்று, மண் மற்றும் பாசனத்தின் வழியாக பரவுவதால் இந்நோயின் தாக்கம் அதிகமாக பரவுவது தெரியவருகிறது.
வல்லுநா் விதைக் கரும்பு, திசு வளா்ப்பு நாற்றுகள் நடவு செய்துள்ள கரும்பு வயல்களிலிருந்து விதைக் கரும்பை எடுத்து நடவு செய்தல், தோகை உரித்தல், எறும்பு நடமாட்டத்தினை கண்காணித்து கட்டுப்படுத்துதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூச்சி மற்றும் பூஞ்ஞானக் கொல்லி மருந்துகள் தெளிப்பது ஆகிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு ஆலோசனைகளை விவசாயிகளுக்கு அலுவலா்கள் வழங்கினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.