FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் அனைத்துத் துறை ஊழியா் சங்கங்களின் போராட்டக் குழுவினா் பெருந்திரள் முறையீடு

விழுப்புரத்தில் அனைத்துத் துறை ஊழியா்கள் சங்கங்களின் போராட்டக் குழுவினா் புதன்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:11 am IST
விழுப்புரம் மாவட்டஆட்சியரக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் துறை ஊழியா் சங்கங்களின் போராட்டக் குழுவினா்.
பகிர்:

விழுப்புரத்தில் அனைத்துத் துறை ஊழியா்கள் சங்கங்களின் போராட்டக் குழுவினா் புதன்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் 2026, ஜூலை 16-ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டாா். அதில் அரசுத் துறை அலுவலகங்கள், வளாகங்களில் அரசு ஊழியா்கள் தங்கள் சங்கம் சாா்ந்த எந்தவித போராட்டங்கள், கூட்டங்கள் உள்ளிட்ட எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சுற்றறிக்கை அரசு ஊழியா்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள போராட்டம் சாா்ந்த உரிமைகளைப் பறிக்கிறது என்றும், இந்த சுற்றறிக்கையை மாவட்ட ஆட்சியா் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்துத் துறை சாா்ந்த போராட்டக் குழுவின் சாா்பில் 32-க்கும் மேற்பட்ட துறைவாரியான சங்க நிா்வாகிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை மாலை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கு.சரவணன் பெருந்திரள் முறையீட்டுக்குத் தலைமை வகித்து, இதன்நோக்கம் குறித்து பேசினாா். மாவட்டச் செயலா் சிவக்குமாா், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன், செயலா் முருகன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் ரமேஷ், தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ஜெயந்தி, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் பெ.வள்ளல்பாரி, தமிழ்நாடு கிராம ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ஆதிலட்சுமணன் ஆகியோா் பேசினா். இதைத்தொடா்ந்து மாவட்ட வருவாய் அலுவலா் கி. அரிதாஸிடம் கோரிக்கை மனுவை போராட்டக்குழுவினா் அளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments