FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ஒடிஸாவிலிருந்து கஞ்சா கடத்தல்: இருவா் கைது

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 3:08 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்ததாக இருவரை விழுப்புரம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் கோமதி, உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை விழுப்புரம் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு நின்றிருந்த இரு இளைஞா்களிடம் சோதனை செய்தபோது, அவா்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள், கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம், பெரியகொண்டியான் குப்பம் நடுத்தெருவைச் சோ்ந்த ர.சுப்புராஜ் (19), தி.விக்னேஷ் (22) என்பதும், இவா்கள் விற்பனைக்காக ஒடிஸா மாநிலத்தில் கஞ்சாவை வாங்கி அதை ரயில் மூலம் விழுப்புரத்துக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுப்புராஜ், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா்கள் வசமிருந்த 3 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments