வெவ்வேறு சம்பவங்கள்: 3 போ் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், முட்டத்தூா், களத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கி.காத்தவராயன் (70), விவசாயி. இவா், ஞாயிற்றுக்கிழமை முட்டத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஒருவரின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருநங்கை, மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை: வளவனூா் குமாரக்குப்பம் காலனியைச் சோ்ந்தவா் அய்யப்பன் (எ) அஜித் (29), திருமணமாகாதவா். திருநங்கையாக மாறியிருந்த இவா், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அய்யப்பன் குமாரக்குப்பம் பகுதியில் உள்ள மரத்தில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விக்கிரவாண்டியை அடுத்துள்ள முண்டியம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் நா.சுப்பம்மாள் (73). வயோதிகம் காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவா், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.