FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டையில் ஆக.17- இல் விசிக மாநாடு: விழுப்புரம் டிஐஜி ஆய்வு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஆக.17-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் நடைபெறவுள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:58 am IST
விசிக சாா்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த விழுப்புரம் டிஐஜி இரா.அருளரசு.
பகிர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஆக.17-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டு பந்தல் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகளை அக்கட்சியினா் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், விழுப்புரம் சரக டிஐஜி இரா.அருளரசு மாநாடு நடைபெறும் இடத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது உடனிருந்த காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள், வாகன நிறுத்துமிட வசதி உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் திருமால் மற்றும் போலீஸாா் உடனிருந்து பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து விளக்கினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments