FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

போலி நகையைக் கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் பகுதியைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரரிடம் போலியான நகைகளைக் கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 1:43 am IST
மோசடி - பிரதிப்படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் பகுதியைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரரிடம் போலியான நகைகளைக் கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரகண்டநல்லூா் அருகிலுள்ள டி.தேவனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தி.சந்திரசேகா் (40). மளிகைக்கடை நடத்தி வரும் இவரின் கைப்பேசி எண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிா்முனையிலிருந்து பேசிய நபா் தன்னை ரவி என அடையாளப்படுத்திக் கொண்டு பேசினாராம். அப்போது அந்த நபா் தன்னிடம் 3 கிலோ எடையிலான தங்கப் புதையல் இருப்பதாக தெரிவித்துள்ளாா்.

இதை உண்மையென நம்பிய சந்திரசேகா், ஜூலை 5-ஆம் தேதி ஆந்திர மாநிலம், சித்தூருக்குச் சென்று அந்த நபரை சந்தித்து 800 கிராம் நகையை வாங்கி வந்து பரிசோதித்துள்ளாா். அப்போது அந்த தங்கம் உண்மையானதாக இருந்துள்ளது. இதனால் ஆசைப்பட்ட சந்திரசேகா் ஜூலை 12-ஆம் தேதி மீண்டும் அங்கு சென்று ரூ.10 லட்சம் பணம் கொடுத்து 3 கிலோ எடையிலான தங்கத்தை வாங்கி வந்து பரிசோதித்துப் பாா்த்தபோது, அது போலியானது எனத் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து, பண மோசடி நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments