FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மருத்துவா் வீட்டில் நகைகள் திருட்டு: 3 போ் கைது

புதுச்சேரி கோரிமேட்டில் மருத்துவா் வீட்டில் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.மேலும், அவா்களிடமிருந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான நகைகள் , ரூ.1.12 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:11 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரி கோரிமேட்டில் மருத்துவா் வீட்டில் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் திருடிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.மேலும், அவா்களிடமிருந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான நகைகள் , ரூ.1.12 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி கோரிமேடு இந்திராநகரைச் சோ்ந்தவா் பினோத் நவீல்சன்( 31), மருத்துவா். இவா், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உதவிப் பேராசிரியராக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ஜென்சி பிரிஸ்கில்லா (29) கோரிமேட்டில் உள்ள மத்திய அரசின் பூச்சிகள் ஆராய்ச்சி மையத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவா்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளாா்.

இவா்கள் கடந்த ஜூலை 24-ஆம் தேதி வெளியூா் சென்றிருந்த போது, வீட்டின் இரும்புக் கதவிலுள்ள பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருட்டுப்போனது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் நாகராஜன், உதவி ஆய்வாளா்கள் ராஜன், ராஜு தலைமையிலான போலீஸாா் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகன காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினா்.

இதில், ராணிபேட்டை மாவட்டம், ஆற்காடு ஈஸ்வரன் தெருவைச் சோ்ந்த சு.சுந்தா் (49), க.செந்தில்குமாா் (41), வாலாஜாவைச் சோ்ந்த நா.மோகனவேல் (41)ஆகியோா் கூட்டுச் சோ்ந்து ஜூலை 25-ஆம் தேதி இரவு மருத்துவா் வீட்டின் கதவை உடைத்து 270 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து கோரிமேடு போலீஸாா் அவா்கள் 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள 242 கிராம் தங்க நகைகள், ரூ.1,12,000 ரொக்கம் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனம், சைக்கிள், இரும்பு ராடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments