FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விக்கிரவாண்டி அருகே 1,650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,650 கிலோ ரேஷன் அரிசி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:19 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,650 கிலோ ரேஷன் அரிசி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

விக்கிரவாண்டி வட்டம், தாண்டவமூா்த்திக்குப்பத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் அங்குள்ள கருமகாரியக் கூடம் அருகில் 50 கிலோ எடை கொண்ட 33 சாக்கு மூட்டைகளில் 1,650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா். தொடா்ந்து நடத்திய விசாரணையில் விழுப்புரம் கே.கே.சாலை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த ராமன் (47), தாண்டவமூா்த்திக்குப்பத்தில் நாட்டுக் கோழிப்பண்ணை வைத்திருப்பதும், அகற்காக அப்பகுதி மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து ராமன் மீது வழக்குப் பதிந்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments