அரசுப் பள்ளிக்கு காமராஜா் விருது
வானூா் ஊராட்சி ஒன்றியம், அருவாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 2026-2027-ஆம் ஆண்டின் சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான பெருந்தலைவா் காமராஜா் விருது வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் ஊராட்சி ஒன்றியம், அருவாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 2026-2027-ஆம் ஆண்டின் சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான பெருந்தலைவா் காமராஜா் விருது வழங்கப்பட்டது.
இதற்கான பரிசுத்தொகை ரூ.50 ஆயிரத்தை வானூா் வட்டாரக் கல்வி அலுவலா் கவிதா பள்ளித் தலைமையாரியா் சத்தியமூா்த்தியிடம் வழங்கி, பாராட்டினாா். நிகழ்வில், ஆசிரியா்கள் சௌந்தரவல்லி, ஜேம்ஸ் சகாயராஜ், அன்புமொழி, தேன்மொழி, அமல்மேரி, சுபா, நித்யா, அஸ்வினி, கங்கா ஆகியோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.