அரசுப் பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் தந்தையுடன் பைக்கில் சென்று சிறுமி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் தந்தையுடன் பைக்கில் சென்று சிறுமி உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், மங்களம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சடையாண்டி. கூலித் தொழிலாளி. இவரது மகள் லட்சுதா (8) மங்களம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 3-ஆம் வகுப்பில் படித்து வந்தாா்.
இந்த நிலையில், சடையாண்டி தனது மகள் லட்சுதாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு புதன்கிழமை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, ஒலக்கூா் கூட்டுச்சாலை பகுதியில் சடையாண்டி பைக்கை சாலையோரத்தில் நிறுத்திபோது, அந்தப் பகுதியில் வந்த அரசுப் பேருந்து பைக்கின் பின் பகுதியில் மோதியது. இந்த விபத்தில் பைக்கிலிருந்து கீழே விழுந்த லட்சுதா பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், ஒலக்கூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.