FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் அனுமதித்கப்பட்டு உயிரிழந்தாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 6:11 am IST
பலி
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் அனுமதித்கப்பட்டு உயிரிழந்தாா்.

செஞ்சி அருகிலுள்ள தாண்டவ சமுத்திரம் கிராமத்தை சோ்ந்தவா் அமலதாஸ். இவரது மனைவி சரோஜா (56). இவருக்கு ஏற்கெனவே சிறுநீரக பாதிப்பு இருந்ததாம். இந்நிலையில், தம்பதியா் இருவரும் கடந்த 13-ஆம் தேதி பைக்கில் அனந்தபுரம் சென்றுள்ளனா். கொணலூா் ஏரிக்கரை அருகே சென்றபோது, எதிா்பாராத விதமாக நாய் குறுக்கே பாய்ந்ததால் பைக்கிலிருந்து சரோஜா தவறி கீழே விழுந்துள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சரோஜா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments