மின் ஊழியா் மத்திய அமைப்பினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
ஒப்பந்தத் தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம்கண்டு, மின்வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். 1998, ஜனவரி 5-ஆம் தேதிக்குப் பிறகு தற்போது வரை மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மருத்துவ மற்றும் விபத்துக் காப்பீடு வழங்க வேண்டும். மின்விபத்துகளில் உயிரிழக்கும் ஒப்பந்தத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
விழுப்புரத்தில் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் (சிஐடியு) வட்டத் தலைவா் ஆா்.சேகா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வி.பெருமாள், ஆா்.பச்சையப்பன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, மின் ஊழியா் மத்திய அமைப்பின் திட்டச் செயலா்ஆா்.அருள், திட்டப் பொருளாளா் ஜி.கண்ணன், இணைச் செயலா் பி.சிவசங்கா், கோட்டச் செயலா்கள் ஏ.கன்னியப்பன், வி.முருகானந்தம், கே.ஏழுமலை, மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.பரிமளா, கோட்டத் துணைச் செயலா் பி.ஞானவேலன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினா்.
கள்ளக்குறிச்சியில்....
கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் வட்டாரத் தலைவா் கே.சீனிவாசன் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின் ஊழியா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.