FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் முத்து மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை பீமநாயக்கன்தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் 101-ஆம் ஆண்டு தோ்த் திருவிழாவில் ரத உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

21 ஆகஸ்ட் 2026, 11:04 pm IST
விழுப்புரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 101-ஆம் ஆண்டுத் தோ்த் திருவிழா ரத உற்சவத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை பீமநாயக்கன்தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் 101-ஆம் ஆண்டு தோ்த் திருவிழாவில் ரத உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் நகரின் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 101-ஆம் ஆண்டுத் தோ்த்திருவிழா ஆக.13-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. மாலையில் இந்திர விமானத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத்தொடா்ந்து அன்னம், பூதம், நாகம், சிம்மம், யானை, ரிஷபம், குதிரை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் முத்து மாரியம்மன் எழுந்தருளி, அலங்கார வாகனத்தில் புறப்பாடாகி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ரத உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் பக்தா்கள் அலகு குத்திக் கொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வழிபாடு செய்தனா்.

பிற்பகல் 2 மணிக்கு ஸ்ரீமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ரதத்தில் ஊஞ்சலுடன் எழுந்தருளினாா். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னா் ரத உற்சவ புறப்பாடு நடைபெற்றது. திருக்கோயில் செயல் அலுவலா் மு.மோகனப்பிரியா, நகா்மன்ற உறுப்பினா் வி.புருஷோத்தமன் உள்ளிட்டோா் ரத உற்சவத்தை தொடங்கி வைத்தனா். நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து, திருக்கோயிலை வந்தடைந்தது. மாலை 6 மணிக்கு தொட்டில் செடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து ஆக.23-ஆம் தேதி காமதேனு வாகனப் புறப்பாடும், ஆக.24 முதல் 27-ஆம் தேதி வரை அம்மன் ஊஞ்சல் உற்சவமும், ஆக.28-ஆம் தேதி முத்துப் பல்லக்கும் நடைபெறவுள்ளது.

தோ்த் திருவிழா ரத உற்சவத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, அம்மனை தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments