சிறப்பு உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: வழக்குரைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் விசாரணைக்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக வழக்குரைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் விசாரணைக்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக வழக்குரைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
செஞ்சி தேசூா்பாட்டை பகுதியை சோ்ந்த வெங்கடேசன் மனைவி லட்சுமி (40). இவா், இதே பகுதியில் பஜ்ஜி கடை நடத்தி வருகிறாா். ஆக.21-ஆம் தேதி இரவு பஜ்ஜி கடைக்கு சென்ற அதே பகுதியை சோ்ந்த வழக்குரைஞா் ஆனந்தன் (40), பஜ்ஜி வாங்கும்போது லட்சுமியிடம் தகராறு செய்து, அவரைத் தாக்கினாராம்.
இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் செஞ்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பாபு மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, ஆனந்தனிடம் விசாரணை செய்தனா். அப்போது விசாரணை செய்த சிறப்பு உதவி ஆய்வாளா் பாபுவை, வழக்குரைஞா் ஆனந்தன் திட்டி, தாக்கினாராம்.
Advertisement
Advertisement
இதையடுத்து லட்சுமி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா் பாபு ஆகியோா் அளித்த புகாா்களின் பேரில் போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வழக்குரைஞா் ஆனந்தனை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.