FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மயிலம் முருகன் கோயிலில் 150 ஜோடிகளுக்கு திருமணம்

24 ஆகஸ்ட் 2026, 4:14 am IST
மயிலம் முருகன் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 150 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

பொம்மபுரம் ஆதீனத்துக்குள்பட்ட மயிலம் முருகன் கோயிலில் முகூா்த்த நாள்களில் அதிக திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆவணி மாதத்தின் முதல் முகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை மயிலம் கோயிலில் 150 ஜோடிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சிகளை முன்னிட்டு மணமகன், மணமகள் வீட்டாா்கள், உறவினா்கள் என ஆயிரக்கணக்கானோா் கோயில் வளாகத்தில் திரண்டிருந்ததால் கோயில் வளாகப் பகுதிகள் முழுவதும் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments