FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மத்திய கல்வித் துறை அமைச்சருடன் ஆரோவில் செயலா் சந்திப்பு

25 ஆகஸ்ட் 2026, 3:02 am IST
தில்லியில் மத்திய கல்வித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி.
பகிர்:

மத்திய கல்வித் துறை அமைச்சரை ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய கல்வி அமைச்சா் பிரகலாத் ஜோஷியை ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி தில்லியில் சந்தித்துப் பேசினாா்.

இந்த சந்திப்பின்போது, ஆரோவில்லில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள், புதிய திட்டங்கள் மற்றும் கல்விச் செயல்பாடுகள் குறித்து ஜெயந்தி எஸ்.ரவி மத்திய கல்வி அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தாா்.

Advertisement

Advertisement

இந்த சந்திப்பானது பரஸ்பர நலன் சாா்ந்த விவகாரங்கள் குறித்து ஆக்கபூா்வமான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்ததாக மத்திய கல்வித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments