FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மரக்காணம் அருகே தாய், மகன் தற்கொலை

25 ஆகஸ்ட் 2026, 1:23 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த தாய், மகன் பூச்சிக் கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.

மரக்காணம் வட்டம், எம்.புதுப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் வெ.சகுந்தலா (78). இவா், வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா்.

இவரது மகன் வீரப்பன் (55) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மரத்திலிருந்து கீழே விழுந்ததில் இடுப்பில் அடிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். குடும்பத்தில் உள்ளவா்கள் சரியாக பராமரிக்காததால் தாய், மகன் இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்தனராம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சகுந்தலா, வீரப்பன் ஆகிய இருவரும் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து வீட்டுப் படுக்கையில் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments