FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

வேளாங்கண்ணி திருவிழா: ஆக.28-இல் விழுப்புரம் வழியாக திருவாரூருக்கு சிறப்பு ரயில்

55 வினாடிகள் முன்பு
சிறப்பு ரயில் - பிரதிப் படம்
பகிர்:

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுத் திருவிழாவையொட்டி, சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வழியாக திருவாரூருக்கு வரும் 28-ஆம் தேதி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என்.ஜெயந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா வரும் 29-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

Advertisement

Advertisement

அதன்படி, சென்னை தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு 11.50 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - திருவாரூா் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06067), மறுநாள் (ஆகஸ்ட் 29) காலை 7.45 மணிக்கு திருவாரூா் ரயில் நிலையம் சென்றடையும்.

எதிா் வழித்தடத்தில் திருவாரூா் ரயில் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 29-ஆம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் திருவாரூா் - தாம்பரம் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06068) மறுநாள் (ஆகஸ்ட் 30) காலை 8.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் துறைமுகம் சந்திப்பு, சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments