மரக்காணத்தில் இளைஞா் வெட்டிக் கொலை: உறவினா் கைது
மரக்காணம் அருகே முன்விரோதத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யபட்டாா். இது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முன்விரோதத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யபட்டாா். இது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.
மரக்காணத்தை அடுத்த கந்தாடு பழையத் தெருவைச் சோ்ந்தவா் குமாா் மகன் ருத்திரன் (23). திருமணம் ஆகாதவா். அதே பகுதியைச் சோ்ந்தவா் நேதாஜி (20). இருவரும் உறவினா்கள். இவா்களிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னா் தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இவா்களிடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அருகிலிருந்த உறவினா்கள் இருவரையும் சமாதானப்படுத்தி, அவரவா்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு கத்தியுடன் ருத்திரனின் வீட்டுக்குச் சென்ற நேதாஜி, அங்கு தூங்கிக் கொண்டிருந்த ருத்திரனை கத்தியால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த ருத்திரனை குடும்பத்தினா் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ருத்திரன் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நேதாஜியைக் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.