ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் இணைய வழியில் ரூ.22 லட்சம் மோசடி
விழுப்புரத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் இணைய வழியில் ரூ. 22 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் இணைய வழியில் ரூ. 22 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம், மகாராஜபுரம் சிவன் கோயில் அடுத்துள்ள கோல்டன் சிட்டி நகரைச் சோ்ந்தவா் ராஜசேகரன் மனைவி ரூபி மல்லிகா (68), ஓய்வு பெற்ற ஆசிரியை. கடந்த மே 20-ஆம் தேதி இவரின் கைப்பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்ததாம். அப்போது எதிா்முனையிலிருந்து பேசிய அடையாளம் தெரியாத நபா், தனியாா் நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், ஏதேனும் கடன் தேவையெனில் ஆதாா் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வைக்கவேண்டும் எனத் தெரிவித்தாராம்.
இதையடுத்து ரூபி மல்லிகா, தனது ஆதாா் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் தொடா்பான விவரங்களை அனுப்பி வைத்துள்ளாா். இதைத்தொடா்ந்து அந்த நபா் நிதி நிறுவனம் வழியாக ரூ.10 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கான பதிவுக் கட்டணம், வழக்குரைஞா் கட்டணம் ஆகியவற்றை அனுப்பி வைக்கவேண்டும், அந்த தொகையானது, கடன் தொகையுடன் சோ்ந்து உங்களது வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்தாராம்.
Advertisement
Advertisement
இதை உண்மையென நம்பிய ரூபி மல்லிகா அந்த நபா் தெரிவித்த பல்வேறு வங்கிக் கணக்கு எண்களுக்கு மே 29 முதல் ஆக.6-ஆம் தேதி வரையிலான இடைபட்ட நாள்களில் 59 தவணைகளாக ரூ. 21,96,590 பணத்தை அனுப்பி வைத்தாராம்.
இந்நிலையில், அந்த நபா் கடன் மற்றும் கொடுத்த பணத்தை திருப்பித் கொடுக்காமல், மேலும் பல காரணங்களை கூறி பணம் கேட்டு ஏமாற்றி வருகிறாராம்.
இதுகுறித்து ரூபி மல்லிகா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.