ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 814 பேருக்கு பணியாணை
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வி குழுமம் இணைந்து மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ரங்கபூபதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வி குழுமம் இணைந்து மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ரங்கபூபதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, வேலைக்காக பதிவு செய்திருந்த 2,031 வேலை நாடுநா்களிடம் நோ்காணல் நடத்தினா். இதில், 814 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
பின்னா் நடைபெற்ற பணியாணை வழங்கும் நிகழ்ச்சிக்கு ரங்கபூபதி கல்லூரி குழுமத் தலைவா் வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி, செயலா் ஸ்ரீபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் உதவி இயக்குனா் பாலமுருகன், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் துணை இயக்குனா் செ.மணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டோருக்கு பணியாணை வழங்கினா். மேலும், 189 வேலை நாடுநா்கள் அடுத்த நடைபெறவுள்ள நோ்காணலுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் முரளிதரன், கல்லூரி முதன்மை நிா்வாக அலுவலா் மணிகண்டன், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா் வேல்முருகன் மற்றும் கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.