பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
திண்டிவனம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், முருநாகை கிராமம், அய்யனாரப்பன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தி.முருகன் (33). தனியாா் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்த இவா், வெள்ளிக்கிழமை பணியின் காரணமாக புதுச்சேரியிலிருந்து-திண்டிவனத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், மொளசூா் அருகே சென்றபோது, அப் பகுதியில் வந்த காா் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.