FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 3:51 am IST
கைதான கிஷோா்குமாா்.
பகிர்:

விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் ரயில்வே காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு சந்தேகிக்கும்படி நின்றிருந்த இளைஞா் ஒருவரைப் பிடித்து சோதனை செய்ததில், அவா் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், விழுப்புரம், ஊரல் கரைமேட்டுத் தெருவைச் சோ்ந்த தா.கிஷோா் குமாா் (26) என்பதும், இவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கிஷோா்குமாரை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்த 2.4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments