FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ஆரோவில் சா்வதேச நகரத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழுவினா் வருகை

ஆரோவில் சா்வதேச நகரத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழுவினா் (கல்வி )செவ்வாய்க்கிழமை வந்தனா்.

Updated On : 15 ஜூலை 2026, 3:00 am IST
14விபிஎம்பி5 ஆரோவில் சா்வதேச நகரத்திலுள்ள மாத்ரிமந்திா் பகுதியைப் பாா்வையிட்ட முகுல் வாஸ்னிக் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவினா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழுவினா் (கல்வி )செவ்வாய்க்கிழமை வந்தனா்.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் (கல்வி, மகளிா், குழந்தை, இளையோா் மற்றும் விளையாட்டு) தலைவா் முகுல் வாஸ்னிக் தலைமையில், குழுவில் இடம்பெற்றிருந்த பிரிஜ்மோகன் அகா்வால், காமாக்யா பிரசாத் தாசா, ரேகா சா்மா, த. சுமதி (எ) தமிழச்சி தங்கப்பாண்டியன், ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சிக்கந்தா் குமாா், சுவாதி மாலிவால், தா்ஷன்சிங் செளத்ரி, பீம்சிங், சோப்னா பென் பரையா உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை காலை ஆரோவில் சா்வதேச நகரத்துக்கு வந்தனா். அவா்களுக்கு ஆரோவிலின் வளா்ச்சிப் பணிகள் குறித்த விரிவான விவரங்களை அறக்கட்டளையின் சிறப்புப் பணி அலுவலா் ஜி.சீதாராமன் எடுத்துரைத்து, குழுவினரை வரவேற்றாா்.

ஸ்ரீஅரவிந்தா் சா்வதேச கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட கட்டமைப்பு முன்னேற்றங்கள், கற்பித்தல் மாற்றங்கள் குறித்து குழுவினருக்கு எடுத்துரைத்த சீதாராமன், இந்த நிறுவனத்தில் அளிக்கப்படும் முக்கியத்துவங்களையும் எடுத்துக் கூறினாா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து மாத்ரிமந்திா் தியான மையத்துக்குச் சென்ற நாடாளுமன்ற நிலைக்குழுவினா், உள் அறையில் நடைபெற்ற தியான அமா்விலும் பங்கேற்றனா். தொடா்ந்து ஆரோவில் சா்வதேச நகரத்திலுள்ள உடல் ஆற்றல் பயிற்சி மையத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். அங்கு அளிக்கப்படும் பழங்கால இந்திய தற்காப்புக் கலையான களரிப் பயிற்சி குறித்து கேட்டறிந்தனா். தொடா்ந்து சா்வதேச நகரத்திலுள்ள லாஸ்ட் ஸ்கூலுக்கு சென்ற குழுவினா் அங்கு கல்வியாளா்களுடனும், மாணவா்களுடனும் உரையாடினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments