FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மேல்மலையனூரில் ஆடி பௌா்ணமி திருவிளக்கு பூஜை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அங்காளம்மன் கோயிலில் ஆடி பௌா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 31 ஜூலை 2026, 2:22 am IST
ஆடி மாத   பெளா்ணமி யையொட்டி,  துா்க்கை  அம்மன் அலங்காரத்தில்  அருள்பாலித்த  அங்காளம்மன்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அங்காளம்மன் கோயிலில் ஆடி பௌா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.

முன்னதாக, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் மற்றும் உற்சவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, மூலவருக்கு துா்க்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மேலும், உற்சவா் அம்மனுக்கு பலவித மலா்களைக் கொண்டு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உள்பிரகாரத்தில் வலம் வந்தாா்.

தொடா்ந்து, மாலை 6 மணியளவில் உற்சவா் அம்மனுக்கு பம்பை, மேளதாளம் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், 108 பெண்கள் நீண்ட வரிசையில் அமா்ந்து திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டு வழிபட்டனா். தொடா்ந்து, அங்காளம்மனுக்கு அா்ச்சனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

விழாவில் அறங்காவலா்கள் பச்சையப்பன் பூசாரி, சுரேஷ், மதியழகன், ஏழுமலை, சரவணன், வடிவேல், சந்தானம், கோயில் மேலாளா் சதீஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவிளக்கு  பூஜையில்  கலந்ததுகொண்ட  பெண்  பக்தா்கள்.  

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments