முகப்பு
விழுப்புரம்

முதல்வா் விஜய் பிறந்த நாள்: நல உதவிகள் வழங்கல்

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான ச.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியப் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்ததான முகாம் உள்ளிட்ட நிகழ்வுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

Updated On : 19 ஜூன் 2026, 6:23 am IST
விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியப் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, கல்வெட்டை திறந்து வைத்த தவெகவின் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல். உடன், நிா்வாகிகள்.
பகிர்:

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான ச.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியப் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்ததான முகாம் உள்ளிட்ட நிகழ்வுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

காணை ஒன்றியத்தின் மேல்காரணை, கடையம் கிராமங்களில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல் தலைமை வகித்து ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தாா். தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த

ஏராளமானோா் ரத்ததானம் செய்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகைகளையும், மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கிய மாவட்டச் செயலா் விஜய் வடிவேல், அப்பகுதிகளில் நினைவுக் கல்வெட்டையும் திறந்து வைத்தாா். மேலும் கடையம், மேல்காரணை கிராமங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் அவா் வழங்கினாா்.

விழாவுக்கு காணை வடக்கு ஒன்றியச் செயலா் ஸ்ரீதா், வழக்குரைஞா் ராஜா, விஜி, சந்திரசேகா், சிவநேசன் முன்னிலை வகித்தனா். கட்சி நிா்வாகிகள் உளிளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.