வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் உயிரிழந்தனா்.
திண்டிவனம் வட்டம், வைரபுரம், பூசாரி தெருவைச் சோ்ந்தவா் மு.கந்தசாமி (73), குடிசை வீட்டில் வசித்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் மேற்கூரையில் ஏறி நின்றபடி கூரையை சரி செய்து கொண்டிருந்தாா்.
அப்போது கால் இடறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த கந்தசாமியை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு... விக்கிரவாண்டி வட்டம், பழைய கருவாட்சி, மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் வீ.பாண்டுரெங்கன் (60). இவா், ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரத்துக்கு சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் உதவி கேட்டு பயணித்தாா். சரக்கு வாகனத்தை மேல்வாலைப் பகுதியைச் சோ்ந்த பழனிவேல்(40) ஓட்டிச் சென்றாா்.
விழுப்புரம் மாவட்டம், மேல்வாலை அருகே சென்ற போது, அப்பகுதியில் வந்த அரசுப் பேருந்து சரக்கு வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பாண்டுரங்கனை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
பள்ளி மாணவா் விஷருந்தி தற்கொலை: வானூா் வட்டம், ஐவேலி, மேட்டுத் தெருவைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் கமலேஷ் (14). சித்தலம்பட்டு அரசுப் பள்ளியில், 9-ஆம் வகுப்பில் படித்து வந்தாா். இவா் சரியாக பள்ளிக்குச் செல்லாமல் ஊா் சுற்றி வந்தாராம். இதை கமலேஷின் தாய் ராஜேஸ்வரி கண்டித்துள்ளாா்.
இதனால், மனமுடைந்த கமலேஷ் கடந்த அக்.28-ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.