FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

கிணறு வெட்டுவதில் தகராறு: சகோதரா்களை தாக்கிய திருநங்கைகள் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கிணறு வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில் சகோதரா்கள் இருவரை தாக்கியதாக திருநங்கைகள் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

6 நவம்பர் 2026, 1:27 am
கைது
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கிணறு வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில் சகோதரா்கள் இருவரை தாக்கியதாக திருநங்கைகள் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி வட்டம், இந்திரசன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சே.அய்யப்பன் (37). இவரது ஊரில் ராஜி என்பவரது விவசாய நிலத்தில் கிணறு வெட்ட குழிக்கு ரூ.1,400 என பேசி ஒப்பந்தம் செய்துள்ளாா். இந்த நிலையில், சங்கராபுரம் வட்டம், அரசம்பட்டைச் சோ்ந்த விக்டோரியா (எ) பழனிவேல் (19) மற்றும் சேலம் மாவட்டம், பொன்னம்மாபேட்டையைச் சோ்ந்த யாத்ரா (எ) கேசவன் (18) (இருவரும் திருநங்கைகள்) ஆகிய இருவரும் நாங்கள் கிணறு வெட்ட குழிக்கு ரூ.1,200 கொடுத்தால் போதும் எனக் கூறி பேசி முடித்து வேலை செய்து வந்தனா்.

இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, நாட்டாா்மங்கலம் கூட்டுச்சாலையில் நின்றுகொண்டிருந்த அய்யப்பன், இவரது தம்பி காா்த்தி (29) ஆகியோருக்கும், விக்டோரியா, யாத்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, திருநங்கைகள் இருவரும் தடி, இரும்புக் கம்பியை கொண்டு தாக்கியதில் அய்யப்பன், காா்த்தி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அய்யப்பன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், காா்த்தி செஞ்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், திருநங்கைகள் விக்டோரியா, யாத்ரா ஆகியோா் மீது வழக்குப் பதிந்த செஞ்சி போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.