செஞ்சி வாரச் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற செஞ்சி வாரச் சந்தையில் ரூ. 4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற செஞ்சி வாரச் சந்தையில் ரூ. 4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச் சந்தை மிகவும் புகழ் பெற்ாகும். 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் பழைமையான இந்த வாரச் சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக செஞ்சி பகுதியில் வளா்க்கப்படும் வெள்ளாடுகள் விற்பனை அதிகளவில் நடைபெறும். செஞ்சி பகுதியிலுள்ள மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளரும் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவண்ணாமலை, கடலூா், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் செல்வாா்கள் என்பதால், செஞ்சி வாரச் சந்தை மிகவும் பிரசித்தி பெற்ாக உள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை தீபாவளித் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே செஞ்சி வாரச் சந்தைக்கு வந்திருந்தனா். அதிகாலை 2 மணி முதல் விவசாயிகள் தங்களது வளா்ப்பு ஆடுகளையும், வெளிமாவட்டத்திலிருந்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகளும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். ஏராளமான வியாபாரிகள் அதை வாங்கிச் செல்வதற்காகவும் வாகனங்களில் சந்தைக்கு வந்திருந்தனா். விற்பனைக்காக சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளா்ப்பவா்களும் கொண்டு வந்திருந்தனா்.
இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் சுமாா் ரூ.4 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தீபாவளியால் விலை கூடுதல்: செஞ்சி வாரச் சந்தைக்கு தேனி மாவட்டத்தில் இருந்து கடந்த 50 வருடங்களாக வந்து ஆடுகளை வாங்கி, தேனியில் விற்பனை செய்து வரும் வியாபாரி ராதாகிருஷ்ணன் (72) கூறியது: நான் இங்கு வந்து, 50 வருஷமாக ஆடுகளை வாங்கி, தேனி பகுதிக்கு கொண்டு போய் விற்பனை செய்து வருகிறேன். இந்த வாரம் குறைந்த அளவிலேயே ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஜோடி ரூ.7, ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை தரத்தை பொறுத்து வாங்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் மேய்ந்து வளரும் ஆடுகள் இந்தச் சந்தையில் கிடைப்பது தனிச் சிறப்பு. இந்த வாரம், தீபாவளி என்பதால் வழக்கத்தைவிட ரூ.ஆயிரம் முதல் ரூ.1,500 வரை கூடுதலான விலையில் வாங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.