தீபாவளி பண்டிகை: விழுப்புரம் கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
தீபங்களின் திருநாள், தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் வகையில் ஜவுளிகள், பட்டாசுகள், அலங்கார அணிகலன்களை வாங்குவதற்காக விழுப்புரம் நகரக் கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனா்.
தீபங்களின் திருநாள், தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் வகையில் ஜவுளிகள், பட்டாசுகள், அலங்கார அணிகலன்களை வாங்குவதற்காக விழுப்புரம் நகரக் கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனா்.
தித்திக்கும் திருநாள் என்றழைக்கப்படும் தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (நவ.8) கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டாலும், விழுப்புரம் நகரிலுள்ள கடைவீதிகளில் பொருள்களை வாங்குவதற்கு கடந்த வாரமே பொதுமக்கள் அதிகளவில் வரத் தொடங்கினா்.
விழுப்புரம் பாகா்ஷா வீதி, மகாத்மா காந்தி சாலையிலுள்ள சந்தைகள், ஜவாஹா்லால் நேரு, காமராஜா் சாலையிலுள்ள ஜவுளிக் கடைகள், நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் வெள்ளி, சனிக்கிழமையன்று அதிகரித்து காணப்பட்டது. இதுபோன்று வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களிலும் சனிக்கிழமை தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விற்பனை நடைபெற்றது. பல்வேறு நிறுவனங்கள் சலுகைகள் பல அறிவித்திருந்தன. பரிசுப் பொருள்களும் வழங்குவதாக அறிவித்த நிலையில், விற்பனை நிலையங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
Advertisement
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிராமப்புற மக்கள் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை விழுப்புரம் நகரத்துக்கு வந்து தங்கள் குடும்பத்துக்குத் தேவையான புத்தாடைகளையும், நகைகளையும் வாங்கினா். நிகழாண்டில் பல்வேறு ரகங்களில் அறிமுகமான கவரிங் நகைகள், பாசி மாலை, பொட்டு வகைகள், உதட்டுச்சாயம் போன்ற அணிகலன்களையும் வாங்கினா்.
இதுபோன்று திருச்சி சாலையிலுள்ள ஜவுளிக் கடைகள், வீட்டு உபயோகப்பொருள்கள் விற்பனையகங்கள், ரயில் நிலையச் சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சென்னை சாலை, கிழக்கு புதுச்சேரி சாலை பகுதிகளிலுள்ள இனிப்பகங்கள் உள்ளிட்டவற்றிலும் மும்முரமாக விற்பனை நடைபெற்றது.
மேலும், விழுப்புரம் நகரில் மொத்த பட்டாசு விற்பனை நிலையங்களிலும், சில்லறை விற்பனை நிலையங்களிலும் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை வந்து பட்டாசுகளை வாங்கிச் சென்றனா். இதைத் தவிர காவல் துறை சாா்பில் மேற்கு காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம் அருகில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டது.
திருச்சி சாலையிலுள்ள காமராஜா் மொத்த விற்பனை காய்கறிச் சந்தையிலும், பாகா்ஷா வீதி, மகாத்மா காந்தி சாலை போன்று நகரிலுள்ள பல்வேறு இடங்களில் காய்கறிச் சந்தைகளிலும் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் இதரப் பொருள்களை வாங்க மக்கள் குவிந்தனா். இதுபோல பாகா்ஷாவீதி, மகாத்மா காந்தி சாலை, பழைய பேருந்து நிலையப் பகுதி, திரு.வி.க. வீதி போன்ற பல்வேறு பகுதிகளிலுள்ள மளிகைக் கடைகளிலும் தீபாவளி பண்டிகை பலகாரங்கள் செய்வதற்கான எண்ணெய், மாவு போன்ற பொருள்களை வாங்க குவிந்த மக்கள் கூட்டம் காரணமாக அப்பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன.
விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளிலும் ஆடு, கோழி போன்ற இறைச்சிகளின் விற்பனை சனிக்கிழமை காலை முதல் மும்முரமாக நடைபெற்றது. பல்வேறு கடைகள் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடா்ந்து விற்பனையில் ஈடுபட்டன. இதுபோல அனிச்சம்பாளையத்திலுள்ள மொத்த மற்றும் சில்லறை மீன் விற்பனை அங்காடியிலும் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்றது.
போலீஸாா் கண்காணிப்பு: விழுப்புரம் பழைய, புதிய பேருந்து நிலையப் பகுதிகள், காமராஜா் சாலை, நேரு சாலை, ரயில் நிலையப் பகுதி, திண்டிவனம் சாலை, திருச்சி சாலை போன்ற பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பணியில் ஈடுபட்டனா். நெரிசல்மிக்க இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை போலீஸாா் அமைத்து, கூட்டத்தைக் கண்காணித்தனா். மேலும், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறும் பகுதியில் போக்குவரத்து போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, நெரிசல் ஏற்படாதவகையில் வாகனங்கள அனுப்பி வைத்தனா்.
விழுப்புரம் நகரம் போன்று கோலியனூா், வளவனூா், காணை, திருவெண்ணெய்நல்லூா், விக்கிரவாண்டி, ஒலக்கூா், திண்டிவனம், செஞ்சி, கண்டாச்சிபுரம், மயிலம், மரக்காணம், வானூா் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஜவுளிக் கடைகள், இனிப்பகங்கள், அசைவ உணவகங்கள், இறைச்சிக் கடைகள், பலகாரப் பொருள்கள் விற்பனையகங்கள் உள்ளிட்டவற்றிலும் தீபாவளி சிறப்பு விற்பனை சனிக்கிழமை மும்முரமாக நடைபெற்றது. நிகழாண்டில் தீபாவளிக்கு முந்தைய இரு நாள்களில் மழை பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால், விழுப்புரம் நகரம் போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொருள்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. தரைக்கடைகள், சாலையோரக் கடைகளில் பொருள்களின் விற்பனையும் மும்முரமாக நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.