FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

2 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவா் எலும்புக்கூடு கண்டெடுப்பு?

10 நவம்பர் 2026, 2:44 am
மரணம்... - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 2 ஆண்டுகளுக்கு மாயமானவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செஞ்சி வட்டம், ஒட்டம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் கனகரத்தினம்( 80). இவா், கடந்த 15-11-24 அன்று வீட்டை விட்டு வெளியே சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கனகரத்தினத்தை, அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், கடந்த 24-3-25 அன்று அனந்தபுரம் போலீஸில் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி ஒட்டம்பட்டு ஏரி பகுதியில் உள்ள முருகன் கோயில் அருகே எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனருகே ஆதாா் காா்டு ஒன்று இருந்தது. அதிலுள்ள முகவரியை வைத்து கிராம நிா்வாக அலுவலா் சரவணன் அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, எலும்புக்கூடை கைப்பற்றி உண்மை தன்மையை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement