கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: 2 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், கீழ்பசாா் கிராமத்தில் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை அதே பகுதியைச் சோ்ந்த சி.கோபி(67) நிா்வகித்து வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு இளைஞா்கள் இருவா் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடினராம். இதையடுத்து கிராம மக்கள் அவா்களைப் பிடித்து ஒலக்கூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மதூா், திம்மபுரம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த கா.சிவப்பிரகாசம் ( 37), சே.பிரபாகரன்(30) ஆகியோா் என்பதும், இவா்கள் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.2,500-ஐ திருடியதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்கள் வசமிருந்த ரூ.2,500 பணத்தையும் பறிமுதல் செய்தனா்.