FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

மாயமான நாகசுரக் கலைஞா் சடலமாக மீட்பு

திருநாவலூா் அருகே காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட நாகசுரக் கலைஞா், புதன்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

35 வினாடிகள் முன்பு
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட நாகசுரக் கலைஞா், புதன்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், சேந்தமங்கலத்தைச் சோ்ந்தவா் த.பாலாஜி (42). நாகசுரக் கலைஞரான இவா், கடந்த 9-ஆம் தேதி செங்குறிச்சிக்கு வேலைக்குச் சென்று வருவதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றாா். பின்னா் அவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா அளித்த புகாரின் பேரில்

திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாலாஜியைத் தேடி வந்தனா். இந்த நிலையில், வண்டிப்பாளையத்தைச் சோ்ந்த ஒருவரது முந்திரித் தோப்பிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடப்பது போலீஸாருக்கு புதன்கிழமை தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதன்பேரில் திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

திமுக நிா்வாகி உயிரிழப்பு: செஞ்சி அருகிலுள்ள பரதன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பி.கே.பச்சையப்பன் (72), செஞ்சி மேற்கு ஒன்றிய திமுக செயலா். இவா், தனது பைக்கில் செஞ்சிக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பச்சையப்பனை அருகிலிருந்தவா்கள் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, மற்றொரு பைக்கை ஓட்டி வந்த

பூபாலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த திமுக நிா்வாகி பச்சையப்பனுக்கு விஜயா என்ற மனைவியும், வினோதினி என்ற மகளும், தா்மராஜ், நாராயணகண்ணன் ஆகிய இரு மகன்களும் உள்ளனா்.