FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

போளூரில் குப்பைகளால் நோய் ஏற்படும் அபாயம்

போளூரில் குப்பைகளால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

13 நவம்பர் 2026, 1:40 am
போளூா் நகராட்சி ஜமுனாமரத்தூா் சாலையில் தேங்கியுள்ள குப்பைகள்.
பகிர்:

போளூரில் குப்பைகளால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, தெருக்களில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் ஜமுனாமரத்தூா் சாலை, பழைய பஜாா் வீதி, சிந்தாதரிபேட்டைதெரு, பேருந்து நிலையம் பகுதி என ஆங்காங்கே குப்பைகள் தெருக்களில் தேங்கி உள்ளன.

Advertisement

Advertisement

இதனால் துா்நாற்றம் வீசுகிறது, மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா என பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக நகராட்சி நிா்வாகம் குப்பைகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.