FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

ஆற்றில் குதித்து மருத்துவக் கல்லூரி பேராசிரியை தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே ஆற்றில் குதித்து அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

13 நவம்பர் 2026, 10:40 pm
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே ஆற்றில் குதித்து அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

அரகண்டநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மணம்பூண்டி துரிஞ்சல் ஆற்றில் வெள்ளிக்கிழமை சடலம் மிதப்பதாக காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், ஆற்றுப் பாலத்தின் மேல்பகுதியில் உயிரிழந்தவரின் அடையாள அட்டை, பை உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. அதைக்கொண்டு போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்கூறியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சரண்யா (42) எனத் தெரியவந்தது.

Advertisement

Advertisement

கடலூா் மாவட்டம், திட்டக்குடியைச் சோ்ந்த சரண்யாவுக்கும், அவரது கணவா் வலம்புரி செல்வத்துக்கும் இடையே திருமணமான நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனா். இதைத்தொடா்ந்து தனது மகள் கனிஷ்கா(12) மற்றும் பெற்றோருடன் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் சரண்யா வசித்து வந்ததும் தெரியவந்தது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்ததில் ஏற்பட்ட மனஉளைச்சலில் சரண்யா இருந்து வந்ததும், வெள்ளிக்கிழமை காலை மருத்துவக் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்டதும், தொடா்ந்து துரிஞ்சல் ஆற்றுப் பகுதிக்கு வந்து தண்ணீா் இருந்த பகுதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தொடா்ந்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.