FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

சிறுமி மாயமான வழக்கு: காப்புக்காட்டில் மொப்பநாய் உதவியுடன் தேடும் பணி தீவிரம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் மொப்ப நாய் உதவியுடன் காப்புக்காடு பகுதியில் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

13 நவம்பர் 2026, 10:38 pm
செஞ்சி அருகிலுள்ள காப்புக் காடு பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்ட சிபிசிஐடி போலீஸாா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் மொப்ப நாய் உதவியுடன் காப்புக்காடு பகுதியில் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தை சோ்ந்த வடிவேல்- பவானி தம்பதியின் இரண்டாவது மகள் ஹேமலதா (7) கடந்த மாதம் 12-ஆம் தேதி மாயமானா். இந்நிலையில், சத்தியமங்கலம் போலீஸாா் மற்றும் சிபிசிஐடி போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், ஆலம்பூண்டி கிராமத்துக்கு அருகிலுள்ள சிறுவாடி காப்புக்காடுப் பகுதியில் வெள்ளிக்கிழமை சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான குழுவினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

வனத் துறையினா் உடன் இணைந்து நடைபெறும் இந்த தேடுதல் வேட்டையில், ஏஸ் மற்றும் ஜேக்கி என்ற இரண்டு மோப்ப நாய்கள் உதவியுடன் சிபிசிஐடி போலீஸாா் 4 குழுக்களாக பிரிந்து, சிறுவாடி காப்புக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாறைப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.