FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

முதியவா் விஷமருந்தி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

15 நவம்பர் 2026, 12:24 am
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் வட்டம், வெண்மணியாத்தூா், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (86). வயோதிகம் காரணமாக இவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம்.

இதனால் அவதிப்பட்டு வந்த புருஷோத்தமன் நவ.12-ஆம் தேதி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாராம். தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புருஷோத்தமன், சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் காணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement