வெவ்வேறு சம்பவங்களில் பிளஸ்1 மாணவி உள்பட 2 போ் தற்கொலை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் பிளஸ் 1 மாணவி உள்பட 2 போ் தற்கொலை செய்துகொண்டனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், முகையூா், பிரதான சாலையைச் சோ்ந்த தங்கராசு மனைவி அழகி (55). தம்பதியினா் இருவரும் சோ்ந்து மது அருந்துவது வழக்கமாக கொண்டிருந்தனராம். இந்நிலையில், நவ.14- ஆம் தேதி மது அருந்தும்போது தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த அழகி, முகையூா் நரிக்குறவா் குடியிருப்புப் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
பிளஸ் 1 மாணவி தற்கொலை: கள்ளக்குறிச்சியை அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தை சோ்ந்தவா் ரா.ஆறுமுகம் 60) இவரது மனைவி மஞ்சாயி. தம்பதியின் இரண்டாவது மகள் ஆஷா (16) நாகலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவா் நீண்டகாலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில் சனிக்கிழமை பெற்றோா் வெளியே சென்றிருந்தபோது, வீட்டின் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் துப்பட்டாவால் ஆஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.