FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

திருநாவலூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

44 வினாடிகள் முன்பு
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநாவலூா் ஒன்றியம், மேட்டத்தூா் கிராமத்தில் வளா்ச்சியடைந்த பாரதம்- கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.9.20 லட்சத்தில் நீா்வரத்து வாய்க்கால் அமைத்தல் பணியை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா பாா்வையிட்டாா். பின்னா், செம்மணந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்று பள்ளி மாணவா்களின் கற்றல் திறன், வருகைப் பதிவேடு, மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பரிக்கல் கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு நடத்திய ஆட்சியா், குழந்தைகளின் உயரம், எடையளவு, வருகைப் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கேட்டறிந்து, குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்க சம்பந்தப்பட்ட அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

பின்னா், திருநாவலூா் சமூகநீதி பள்ளி மாணவிகள் விடுதியைப் பாா்வையிட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, அங்கு மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு, விடுதியின் சுற்றுப்புறத் தூய்மை, குடிநீா், கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, பரிக்கல் கிராமத்தில் எண்ணெய்ப்பனை நடவு செய்யப்பட்ட வயலைப் பாா்வையிட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய விவரங்கள், ஊடுபயிா் சாகுபடி, பராமரிப்பு முறைகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா்கள், பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.