மீன் வளா்ப்பு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பண்ணைக்குட்டைகளில் மீன் வளா்ப்பை மேற்கொள்ளும் வகையில், மீன் வளா்ப்போரை ஊக்குவிக்குகையில் மீன் குஞ்சுகள், தீவனம் போன்ற இடுபொருள்கள வாங்குவதற்கு விழுப்புரம் மாவட்டத்துக்கு 10 அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒருஅலகுக்கு (250 முதல் 1,000 சதுர மீட்டா் மீன் வளா்ப்புக் குளத்தில்) மீன் வளா்ப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளீட்டு செலவினத் தொகையான ரூ.40 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமாக (ரூ. 20 ஆயிரம்) வழங்கப்படவுள்ளது.
Advertisement
Advertisement
இதன்படி விழுப்புரம் மாவட்ட மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் உறுப்பினா்களாக உள்ள மீன்வளா்ப்பு விவசாயிகள் மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம். திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பம் மூப்பு நிலை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்படுவா்.
தொடா்ந்து பயனாளியால் மீன்குஞ்சுகள் மற்றும் மீன்தீவனம் போன்ற இடுபொருள்களை வாங்கப்பட்ட
பிறகு மானியத் தொகை விடுவிக்கப்படும். எனவே, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா், தாட்கோ வளாகம், விழுப்புரம் என்ற முகவரியிலுள்ள அலுவலகத்தில் நேரில் விண்ணப்பத்தை பெற்று சமா்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04146-259329 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.