முகப்பு
விழுப்புரம்

ஆற்றில் மூழ்கி அா்ச்சகர் பலி!

வடவாற்றில் மூழ்கி அா்ச்சகர் பலியானார்.

7 வினாடிகள் முன்பு
ஆற்றில் மூழ்கி அா்ச்சகர் பலி!
சடலம்
பகிர்:

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே மேலக்கடம்பூா் கிராமத்தில் அமிா்தகடேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தஞ்சை மாவட்டம், கும்பகோணம் புது தெருவைச் சோ்ந்த சீ.சரவணன் (52) தினந்தோறும் கும்பகோணத்தில் இருந்து வந்து பூஜை செய்து வந்தாா்.

அா்ச்சகா் சரவணன் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ பூஜை செய்வதற்காக காட்டுமன்னாா்கோவிலில் இருந்து பொருள்களை வாங்கி வந்து கோயிலில் வைத்து விட்டு, இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள வடவாற்றில் குளிக்கச் சென்ற நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த காட்டுமன்னாா்கோவில் போலீஸாா், தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த அா்ச்சகா் சரவணனுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.